பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

உணர்வு உனக்கு இருந்ததில்லை என்றும் நினைவு வருகிறது. அக் கலைபற்றி மேலும் கொஞ்சம் சொல்லேன்.’ - - இவ்வளவு நேரமும் நான் எண்ணிக்கொண்டது. இதுதான். கமனக் கணிப்புக் கலே ஒழிக. அந்த வாத்தை, வான் கோழி மாதிரி பெரிதான வாத்தை, வீடு மாதிரி பெரிதாக இருந்ததை நான் தவற விட்டேன். ஏன் என்று தெரியவில்லே. ஆகவே இப்போது தாத்தா விடமிருந்து உபதேசம் பெறவேண்டியிருக்கிறது.

தத்தா மேலும் சிறிது கிளுகிளுத்தார். இந்தக் கமனக் கணிப்பை நீ புரிந்துகொள்கிற அளவுக்கு நான் விவரித்தேன் என்றே நினைக்கிறேன். அதை அதனுடைய முக்கிய அம்சங்களுக் குள் அடக்கிக் கொடுத்தேன்.

நீ புல்தரைக்குத் தண்ணிர் தெளிக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். உன் தம்பி ராய் பின்புறத் தோட்டத்தினுள்டே ஓடுகிருன், அவனை நனைய வைக்க வேணும் என்ற எண்ணம் திடீ தென்று உனக்கு ஏற்படுகிறது. அவன் ஸ்நானத் தொட்டியை உபயோகிக்க முடியும். ஆனல் நாம் ரொம்பவும் சொந்தமான விஷயங்களைத் தொடவேண்டாமே. -

பையன் காற்றுக்கு எதிராக ஒடுகிருன். உன் கையில் நீர்க்குழாய் இருக்கிறது. நீ அவனை நனைக்க விரும்பிஞ்ல் அநேக காரியங்கள் செய்யவேண்டும். ஒன்று, குழாயைப் பிடிக்கவேண் டிய விதம். இரண்டு, காற்றின் வேகத்தைக் கணக்கிடல். F, ராய் எவ்வளவு வேகத்தில் ஒடுகிருன் என்று தீர்மானிப்பது, -

அதனுல் குழாய் காற்றினல் பின்னுக்குத் தள்ளப்படுவ, தற்கு முந்தி இவ்வூளவு தூரம்தான் தண்ண்ர்ை விசிறு என்ப தெரியும், ராய் இவ்வளவு வேகத்தில்தான் ஒட முடியும் எனப் புரியும். ஆகவே, நான் நினைக்கிறபடி நீ புத்திசர்வியாக இருந் தால், ராய்க்குச் சிறிது முன்னுடியே குறி வைத்துக் குழாயைப் பிடிப்பாய், தண்ணீர்ச் சிவிறல்க் காற்று பின்னுக்கடிக்கும். நீ முதலிலேயே கணக்குப் பண்ணிய இட்த்தில் ராயும் தண்ணிரும் மோதுவது சாத்தியமாகும். -

இதுதான் வாத்துச் சுடும். வித்தை. கமனக் கணிப்புக் இதுவே, குழிலிருந்து நீர் பாய்வது போல், துப்பாக்கி tலிருந்து செல்கிறது. ராய் ஓடி வருவது மாதிரி வாத்து றது. தண்ணீர் ஒரு பக்கம் போவதுபோல, குண்டு ஒரு திசையில் போகிறது. ராய்க்கும் தண்ணீருக்கும், வ்ாத்துக்கும் குண்டுக்குமிடையே உறவு ஏற்ப்டுத்துவது காற்றுதான். ஏனென் முல் எப்போதும் குண்டு, குழாயிலிருந்து தண்ணீர் வெளிப்படுவது போலவே, துப்பர்க்கியிலிருந்து பாய்கிறது. ’’

ஏதாவது கேள்வி உண்டா என்று கேட்கிற தோரணையோடு காணப்பட்டார் தாத்தா. நான் ஒன்று கேட்கவேண்டி யிருந்தது. * நிச்சயமாக, இந்த ராய்-தண்ண்ரீர் விவகாரம் நேர்த்தியாகத்