பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்துக்கும் வாத்துக்கும் வித்தியாசம் ?

சோகமாகவும் வெறுப்பாகவும் பார்த்தார்-ஒருவன் வாத்துக்களை முடமாக்குவது நல்லதல்ல, ஏனெனில் வெடிமருந்தின் விலை அதிகம் என்று கூறுவது போல.

காலை முடியும் தறுவாயில், ஒன்பதரை மணி சுமாருக்கு வாத் துக்கள் அவற்றின் சுபாவப்படி நின்று போனதும், தாத்தாவின் கமனக் கணிப்புக் கலையை நான் நன்கு கிரகித்துக் கொண்டதாகக் கருதினேன். ஒரு விஷயம் எனக்கு நிச்சயமாகப் புரிந்தது ; அது நம்மை நோக்கி நேராக வந்தால் ஒழிய, அல்லது நேரே போளுல் தவிர, அதையே குறிவைத்துச் சுடுவது சாத்தியமாகாது. உண்மை யில் அது இவ்விதம் செய்வதில்லை. வருகின்ற வாத்து கீழ்நோக்கித் தாழ்ந்து அல்லது மேலே சாய்வாகவோ தான் பறக்கிறது. போகிற வாத்து எப்பவும் சற்று மேல்நோக்கியே போகிறது. குண்டு போய் சேருகிறபோது பறவை எங்கிருக்கும் என்று கருதுகிருேமோ, அந்த இடத்தையே குறி பார்க்கவேண்டும்.

பத்து மணிக்குச் சிறிது பனி விழத்தொடங்கியது. படகில் கிடந்த வாத்துக்களை தாத்தா எண்ணினர். இது போதும். வீட்டில் நாமும் தின்று, அயலாருக்கும் கொடுப்பதற்குப் போது மானபடி நிறையவே இருக்கின்றன. அடுத்த வாரத்துக்கு, அல்லது அடுத்த பருவத்துக்கோ, கொஞ்சம் விட்டு வைப்போம் ‘ என்றார். நாங்கள் சதுப்பு நிலத்தில் அமர்ந்து, காப்பியில் எஞ்சியிருந் ததைக் குடித்தோம். ஆப்பிள்களையும், மிஸ் லாட்டி ஆக்கிவைத் திருந்தவற்றிலிருந்து நாங்கள் திருடி வந்ததையும் தின்றாேம். சகதி நாற்றம் பலமாய்க் காற்றாேடு கலந்து வந்தது. மென்மையான பனித் திவலைகள் விழுந்து கொண்டிருந்தன. செஞ்சிறகுக் கரும் பறவைகள் வாய்மூடிக் கொண்டன. அவ்வப்போது, கனத்த மேகங்களின் கீழ் தணிந்து பறந்து போகும் வாத்துக் கூட்டம் மட்டுமே காணப்பட்டது. ஓயாது குளிர் அதிகரித்துக் கொண்டே யிருந்தது.

நமது காலைப் பொழுது மிக அருமையாக இருந்தது. அமெச்சூரான நீ அற்புதமாய் செயலாற்றினய் என்றே நான் நினைத்தேன். இதைக் கொண்டாட வேணும் என்ற உணர்ச்சி உனக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. ஆகவே இப்போது நீ படகைச் செலுத்து. அது உனக்கு அமைதி தரும் என்று தாத்தா சொன்னர்.