பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

அது. தனது கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு அது நேராக எங்கள் மறைவிடம் நோக்கி வந்தது. அக் கூட்டத்தில் பதினேந்து, பதினறு கோழிகள் இருந்ததாக பீட் பின்னர் என்னிட்ம் சொன்னன். அதை நான் அறியேன். நான் கண்டதெல்லாம் தலைவனத் தான். அதன் தாடையில் தொங்கிய சதை விடியற் காலையில் செக்கச் சிவந்திருந்தது. அதன் கருஞ்சிவப்பு மார்பு புெரிய இறகு மெத்தைபோல் தோன்றியது. பரவிவந்த ஒளி வீச்சில் அதன் செம்மையும் கருமையும் எடுப்பாக விளங்கின. தான் மோ பறவையைப் பார்த்ததில்லை. நில்ை, இது ஒரு G#jo விடப் பெரியதாக இருந்தது. ஆஇ இது ஒரு

முடிவில் அது, வான்கோழி பாஷையில் தனக்குத்தானே ஏசிக்கொண்டு, தன் குடும்பத்தின் நடுவில் வந்து சேர்ந்தது. தாங்கள் பதுங்கியிருந்த இடத்துக்கு முப்பது கெஜ துரத்தில் நின்று, தனது படையை நோக்கும் ஒரு தளபதி மாதிரி கன்னித் தது. பிறகு, பாரிஸ் நகரிலுள்ள கோடீஸ்வரனே விழித்தெழிச் செய்யும்படியான கூச்சல் ஒன்றை ஒலிபரப்பியது. அன்று காலேயில் கட்டற்றுத்திரியும் தேவதூதர்களேக் கூடத் தான் பிடிக்கப் போவ தாகக் கூறுவதுபோல் அது வான் நோக்கிக் கழுத்தை நிமிர்த் தியது. அப்பொழுது தான் தாத்தா என் புஜத்தில் குத்திஞர்.

நான் எனது சிறு துப்பாக்கி முகப்பினுல் அதன் தலையை மறைத்து, விசையை அழுத்தினேன். அதே சமயம் டாமும் பிட்டும் தாத்தாவும் சுட்டார்கள். நான் ஒரு முறைதான் சுட்டேன். அவர்கள் இருமுறை சுட்டனர். புல்லடர்ந்த அந்தச் சிறு பைன்மரப் பாதையில் நிகழ்ந்ததை நான் மறக்கவே மாட்டேன். என்னுல் சுடப்பட்ட பெரிய பறவை தலையை இழந்து கீழே விழுந்தது. ஆனல் அது தன் சிறகுகளை அடித்துக் கொண்டு, வெறிபிடித்த யந்திரம் போல், சுற்றிச் சுழன்றது. இன்னும் ஆறு வான் கோழிகளும் அவ்விதமே செய்தன. கர்ட்டு வான் கோழிகள் ஏழு, சூரியன் எழுவதற்கு முன்னர் அமைதி திறைந்த காட்டின் நிழற் பாதையில், மரண நாட்டியம் பயின்ற காட்சி, அதுவரை நான் கண்டிருந்த நரகலோகத்தில் அவதி யுறுவோர் பற்றிய சித்திரங்களை எல்லாம் ஜீவனற்ற கிராமியத் தோற்றங்களாகச் செய்து விட்டது.

ஒவ்வொன்றும் கத்திக்கொண்டு ஒட முயன்றது. எழுந்து, புதரை நோக்கி ஓடிய இரு வான்கோழிகளும் இதில் அடங்கும். ஆளுல் அவற்றின் உடலில் குண்டுகள் புகுந்ததும் அவை அசை விற்றுக் கிடக்க முடிவுசெய்தன. குழப்பும் மிகுந்த காட்சி அதைப் போல வேறெதையும் நான் அன்றும், இன்றும், என்றுமே கண்ட தில்லை. நான் பெரியவனகி, ஒன்பது சிங்கங்களுக்கிடையே அகப் பட்டுக் கொண்டது கூட அதற்கு இணையாகாது. அந்தப் பிராந்தியம் பூராவும் ஒரே வான்கோழி மயமாகி விட்டதாகத் தோன்றியது.