உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


றித்தியது. அவர் குழந்தையைப் போல் திறந்த வெள்ளைச் சிந்தையுடையவர். ஆனால் போராட்டத்தில் காலனும் அஞ்சும்படியாக எதிரிகளைக் கலக்குவார். ஐரிஷ் தேசியப்படையின் ஒரு பெரும் பிரிவுக்கு அவரே தலைவராக இருந்ததார். 1919ஆம் ஆண்டு முதல் அவர் பிரிட்டிஷாரைப் பல இடங்களில் தாக்கியுள்ளார். அரக்லன் படை வீடுகளைப் பிடித்ததும் அவருடைய சாமர்த்தியமேயாகும்.

அரக்லனைத் தாக்கியதற்குப் பின்னால் மைக்கேல், பிரென்னன் கிளேர் என்ற இடத்தில் படைவீடுகளைத் தாக்கி, அங்கிருந்த ஆயுதங்களையெல்லாம் அபகரித்துக் கொண்டார். அங்கு கான்ஸ் டபிள் பக்லி என்பவன் முதலில் தொண்டர்களை எதிர்த்து நின்று, பின்னால் கீழ்ப்படிந்து விட்டான். (அவன் பிற்காலத்தில் நடந்த உள்நாட்டுக் கலகத்தில் கெர்ரி என்னுமிடத்தில் கைதியாயிருந்த பொழுது கொல்லப்பட்டான்.) தொண்டர்கள்.அடுத்தபடியாக ஏப்ரல் 18ஆம் தேதி பல்லிலண்டர்ஸ் படைவீடுகளை முற்றுகையிட்டுப் பிடித்துக் கொண்டனர். அவ்விடத்தில் மூன்று போலிஸாருக்குப் படுகாயம் எற்பட்டது. படைவீடுகள் முற்றிலும் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கிருந்த போலிஸார் சகல ஆயுதங்களையும் தொண்டர்கள் தலைவராய் நின்ற ஸின்மலோனிடன் சமர்ப்பித்துவிட்டுச் சானாகதியடைந்தனர்.

தான்பிரீனும் திப்பெரரித் தொண்டர்படையை அழைத்துக்கொண்டு மூன்று இடங்களில் படைவீடுகளைத்தாக்கினான். முதலாவது அவனுக்குப் பணிந்தவை டிரங்கன் படைவீடுகள். அங்கு போராட்டம் நடந்தது ஜூன் 4ஆம் தேதியில்.

டிரங்கனில் நடந்த போராட்டம் முடிவடைய வெகுநேரம் பிடித்தது. அதில் கலந்து கொண்ட தொண்டர்படை அதிகாரிகள் தான்பிரீன், ஸின்டிரீஸி, லிமஸ் ராபின்ஸன், எர்னி ஒ மல்லி, ஸின்ஹோகன் ஆகியோர். விடியும்வரை இருபக்கத்தாருக்கும் அருஞ்சமர் நடந்தது. காலை இளஞ்சூரியனின் கிரணங்கள் வீசிய பின்னும் அவ்விடத்தில் தொண்டர்களுடைய துப்பாக்கிக் குண்டுகளும் வெடி குண்டுகளும் சடசடவென்று வெடிப்பது நிற்கவில்லை. சிறிது கோத்தில் பகைவர்கள் சுடுவதைத் திடீரென்று நிறுத்தி விட்டனர். ஒரு நிமிஷத்திற்குப் பின்பு ஒரு மூலையிலிருந்த ஜன்னல் வழியாகப் போலிஸார் குழல் ஊதினார்கள். அதைக்கேட்டுத் தொண்டர்கள் அவர்களை வெளியே வந்து நிற்கும்படி உத்தரவு போட்டார்கள். அவ்வாறே அவர்கள் வெளியே வந்து நின்று தங்கள் ஆயுதங்களைச் சமர்ப்பித்தனர். தொண்டர்கள் அவர்களைக் கைது செய்து கொண்டு மற்றப் பட்டாளங்கள் வெளியிலிருந்து உதவிக்கு வருமுன்னால், விரைவாக ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். ஊருக்கு வெளியே சென்றதும் அவர்கள் தங்களுடைய கைதிகளை மன்னித்து விடுதலை செய்தார்கள் அக்கைதிக்கூட்டத்தில் ஆறு கான்ஸ்டபிள்களும் இரண்டு சார்ஜன்டுகளும் இருந்தனர்.தொண்

108