உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பட்டது. டி வலெரா 1932 முதல் 1948 வரை தொடர்ந்து பிரதமராயிருந்தார். டிவலெரா பதவிக்கு வந்தபோதிலும் இவரையும் IRA எதிர்த்தது. இவரின் ஆட்சியின் கீழ்க்கூட பல IRA உறுப்பினர் கைது செய்யப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். இறுதியாக 1948 ஆம் ஆண்டு குடியரசுப் பிரகடனத்தைத் தொடர்ந்து தமது ஒரு நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கூறி அயர்லாந்து அரசுக்கெதிரான போரை விடுத்து வட அயர்லாந்தை தென் அயர்லாந்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் IRA தொடர்ந்து ஈடுபடத் தொடங்கியது. இந்தவகையில் வட அயர்லாந்துப் பிரச்சினை தொடர்ந்தும் நீடிக்கும் ஒரு பிரச்சினையாக இன்று வரை இருந்து வருகின்றது.

21