ப. ராமஸ்வாமி
குறிவைத்துச் சுட்டன. அத்துடன் ஓடைப்புறத்திலும், மற்ற இடங்களிலும் சூழ்ந்து நின்று கொண்டிருந்த அவர்களுடைய நண்பர்களின் குண்டுகளே அவர்களைக் கொன்றுவிடக்கூடும். ஆயினும், அவர்கள் பகைவர்களுக்கு மிக நெருக்கமாக நின்று போராட வேண்டியிருந்தது.
இவர்கள் மூவரும் வண்டிக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தார்கள். அந்த வண்டி எதிரிகளுடைய குண்டுகளால் துள்துளாகப் பிய்ந்து ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. ஒரு பக்கம் கூரிய அம்புகள் போன்ற மரக்குச்சிகள் பாய்ந்தன. ஆனால் குண்டுகள் ஆட்களைத் தவிர மற்றெல்லாவற்றையுமே துளைத்தன. அந்த வேளையில் எதிர்ப்பக்கத்திலிருந்து பகைவர்களுக்கு உதவியாக வேறோரு கார் விரைந்து வந்தது. அதிலிருந்தவர்களும் சுட ஆரம்பித்தார்கள். தான்பிரீன் கூட்டத்தார் இரண்டு கொள்ளிக்கட்டைகளுக்கு இடையில் அகப்பட்ட எறும்புக் கூட்டத்தைப்போல் ஆகிவிட்டனர். ஆயினும் சிறிதும் மனம்தளராது அவர்கள் அரும்போர் புரிந்துவந்தனர். அப்பொழுது திடீரென்று பகைவரின் குண்டொன்று தான்பிரீனுடைய இடதுகாலில் பாய்ந்தது. அவன் காலில் குண்டு பாய்ந்ததை உணர்ந்தானேயொழிய அது பாய்ந்த இடத்தைக் கூடக் குனிந்து பார்க்கவில்லை. சுடுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தான். கார்களிலிருந்து ஆங்கிலேயர் பன்னிரண்டு நீண்ட குழல் துப்பாக்கிகளாலும் ஒரு யத்திரத்துப்பாக்கியாலும் சுட்டு வந்தனர். தான்பிரீன் கூட்டத்தார் ரிவால்வர் முதலிய சிறு ஆயுதங்களுடன் சிறிதும் தளராது எதிர்த்து நின்றனர். ஆங்கிலேயர் சரியாகக் குறிவைத்துச் சுட்டால், வெளியே நின்ற பதினோரு பேர்களும் ஒரு கணத்தில் இறந்து வீழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய கைகளும் கால்களும் நடுங்கும்பொழுது அவர்களுக்குக் குறி எப்படி வாய்க்கும்!
இவ்வாறு வெகுநேரம் அருஞ்சமர் நடந்தது. திடீரென்று பகைவரின் ஒருவன் குறிபார்த்து மார்ட்டின் லாவேஜைச் சுட்டுவிட்டான். குண்டு அவன் உடலில் தைத்து, அவன் குற்றுயிராய் சாய்ந்து விட்டான். சில நிமிஷங்களுக்கு முன்னால் அயர்லாந்தைப் பற்றியும் அதன் விடுதலையைப் பற்றியும் ஆனந்தமாய்ப்பாடிக் கொண்டிருந்த இளஞ்சிங்கம் போன்ற லாவேஜ், ஆங்கிலேயரின் குண்டால் அடிப்பட்டு அருகே நின்ற தோழன் தான்பிரீனுடைய கைகளில் சாய்ந்தான். தான்பிரீன் அவனை மார்போடு அனைத்துக் கொண்டான். சுற்று முற்றும், எங்கனும் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பு மழையின் நடுவே தாய்நாட்டுக்காகப் போராடி, அந்நியனுடைய குண்டை மார்பிலேந்தி வீரமரணம் அடையவேண்டுமென்று விரும்பிய லாவேஜ்தன் தோழனின் கைகளிலே வீழ்ந்து கிடந்தான். தான்பிரீன் அவனை விதிப்புறத்தில் கொண்டு கிடத்தினான். ஸாவேஜின் மெல்லிய இதழ்கள் அசைவதைக் கண்டு அவன் ஏதோ சொல்ல விரும்புவதாக எண்ணி, அவன் வாயில் செவி வைத்துக் கேட்டான். 'என் காரியம் முடிந்து போயிற்று தோழா போரை விடாது நடத்துங்கள்!' என்று மெல்லி குரலில் ஸாவேஜ் கூறினான். ஆயிரம் இடிகள் விழு
30