உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


றாமலே ராணுவ உடை தரித்து அணிவகுத்துச் சென்றதுதான். இத்தகைய மந்தபுத்திக்காரர்களால் பின்னாலும் பலதடைகள் ஏற்பட்டன. ஆனால் தான்பிரீன் கூட்டத்தினர் அவைகளைப் பொருட்படுத்தவில்லை.

தீப்பெரரியில் நடந்த இச்சம்பவத்தைச் சில்லறை உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுகின்றனர். உடனே குற்றவாளிகளைக் கைது செய்யும்படி உத்தரவு பிறந்தது. தான்பிரீன் மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தியின் விருந்தினராகச் சிறைசெல்வதற்கு விரும்பவில்லை. வெளியிலே பல வேலைகள் காத்து நிற்கும் பொழுது, மாமனார் வீட்டில் விருந்துண்ன என்ன அவசரம்? அவனும் ஸீன்டிரீஸியும் வீட்டைவிட்டு வெளியேறி வெளியிடங்களுக்குச் சென்று போலிஸ் புலிகளின் கண்ணில் படாமல் மறைந்தனர். ஆனால் சில நாட்களில் ஸீன் போலிசாரால் கைது செய்யப்பட்டான். அவன் கார்க் நகரத்து ஜெயிலில் கொண்டுவைக்கப்பட்டான். அங்கே வேறு பல புரட்சித் தலைவர்கள் இருந்தனர். ஸீன் அவர்களோடு கலந்து பின்னால் செய்ய வேண்டிய காரியங்களுக்குத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்தான். புரட்சிக்காரர்களைச் சிறைகளில் அடைத்து வந்தது அவர்களுக்கு விசேஷ உதவியாக இருந்தது. பல திறப்பட்ட அபிப்பிராயங்களுடைய புரட்சிக்காரர்கள் வெளியிலேயே ஒன்று கூடுவதற்கு வழியில்லாதாகையால் சிறைகளுக்குள்ளே ஒருவருக்குகொருவர் வந்து பேசிக்கொள்வதற்குப் பிரிட்டிஷார் உதவி செய்து வந்தனர். பல புரட்சிக்காரர்கள் சிறையில் வைத்துத்தான் ராணுவப் பயிற்சி பெற்று வெடிகுண்டு செய்யவேண்டிய வழிகளைத் தெரிந்து கொண்டார்கள். ஆதலால் சிறைச்சாலையே புரட்சிக்காரர்களின் சர்வகலாசாலை என்பது பொருந்தும்.

ஸீன்டிரிஸ் ராணுவ நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு இரண்டு வருஷம் தண்டனை அடைந்தான். ஆனால் எட்டு மாதத்திற்குப்பிறகு விடுதலை செய்யப்பட்டான். இந்த விசாரனையெல்லாம் வீண் ஆடம்பரத்தைத் தவிர வேறில்லை. ஏனென்றால் தேசியத்தொண்டார்கள் எதிர் வழக்காடுவதில்லை. பிரிட்டிஷ் நீதி மன்றத்திற்குத் தங்களை விசாரிப்பதற்கு உரிமையே கிடையாது என்று அவர்கள் கூறிவந்ததார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கும்; சாட்சிகள் போலீஸார் கட்டிக் கொடுத்த பொய் மூட்டைகளை அவிழ்த்து அளந்து கொண்டிருப்பார்கள். அதேசமயத்தில் குற்றங்சாட்டப் பெற்றுக் கைதிக் கூண்டில் நிற்கும் தொண்டர்கள் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருப்பார்கள். விசாரணையையும் தண்டனையையும் அவர்கள் ஒரு துரும்பாகக்கூட மதிக்கவில்லை. சிரித்த தாமரை மலர் போன்ற முகத்துடன் அவர்கள் சிறைசென்றவண்ணமாயிருந்தனர். அடிமை நாட்டிலும் அந்த ஆட்சியுள்ள நாட்டிலும் கண்ணியமானவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைதானே!

சிறைக் கோட்டங்கள் மண்ணுலகில் மனிதனால் படைக்கப்பட்ட நகரங்கள். பெரும்பாலும் கொலை, களவு செய்து சிறைசெல்லுவோர் வாழ்க்கையில்

40