பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


அந்த எல்லையை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்றும், இல்லாவிடில் அவர்களுடைய உயிர் அவர்களுக்குச் சொந்தமில்லை என்றும் ஓர் எச்சரிக்கை விளம்பரத்தைத் தயார் செய்தார்கள். அந்த விளம்பரம் தேசம் முழுவதும் ஒட்டப்பட்டது. பத்திரிகைகள் அந்த விளம்பரத்தை வெளியிட்டு ஏளனம் செய்து எழுதின. அந்த எச்சரிக்கை கானல் நீராகக்கருதப்பட்டது. ஆனால், அது உண்மையாகி விட்டதாகப் பிற்காலச்சரித்திரத்திலே காணலாம்.

சில நாட்களுக்குப் பிறகு தொண்டர்கள் தலைமை அதிகாரிகளுடைய உத்தரவை மீறித்தலைநகரான டப்ளினுக்கே சென்று விடவேண்டும் என்று துணிந்து புறப்பட்டனர். ராபின்ஸனும், டிரீஸியும் முன்னதாகவே டப்ளினில் இருந்தனர். அங்கு மிகுந்த எச்சரிகையுடன் நடமாட வேண்டியிருந்தது. ஏனெனில் போலிஸ் கெசட்டில் லொலோஹெட்பக் கொலைகளில் சம்பந்தப்பட்டவர் ஒவ்வொருவரைப் பற்றிய விவரமும், அங்க அடையாளங்கள் முதலியவையும் வாரந்தோறும் விளம்பரமாகி வந்தன. பிடிப்பவர்களுக்குப் பரிசும் கிடைக்கும்.

தான்பிரீன்தானும் விரைவாக டப்ளின் செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். அங்கு சென்றால்தான் பல கஷ்டங்களும் நீங்குமென்று கருதினான். டிம் ரியான் என்னும் தோழன் ஒரு மோட்டார்காருடன் உதவிக்கு வந்து சேர்ந்தான். டாம்மி என்பவன் காரை ஒட்டுவதற்கு முன்வந்தான். தான்பிரினும் ரியானும் காரின் பின் பக்கத்திலும், ஹோகனும் டாம்மியும் முன்பக்கத்திலும் அமர்ந்து கொண்டு, வடதிசைநோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் லிமெரிக் நகருக்குச் செல்லும் வரை ஒரு விசேஷமும் ஏற்படவுமில்லை.

லிமெரிக் நகர வீதியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மோட்டார் லாரிகளில் வந்து கொண்டிருந்தனர். அத்தனை பேர்களும் ஏதோ பெருங் கூட்டங்களைக் கைது செய்யப்போவதாகத் தோன்றியது. தான்பிரீன் கூட்டத்தாரைப் பிடிக்கவே ராணுவத்தார் லாரிகளில் சுற்றிக் கொண்டிருந்தனர். தொண்டர்கள் எங்கோ பக்கத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு அவர்களைப் பிடிப்பதற்காகவே ஏராளமான ஆயுதங்களையும், யந்திரத்துப்பக்கிகளையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர்.

தான்பிரீனும் பெரிய அபாயம் ஏற்படப்போவதாக எண்ணினான். ஒரு சிப்பாய் சிறிது சந்தேகம் கோண்டுவிட்டாலும், அவனுடைய கூட்டத்தாருக்கே ஆபத்துத்தான். சிப்பாய்களில் பணி அவர்களுடைய அங்க அடையாளங்களைப் பற்றி நன்றாகப் படித்து வைத்திருந்தனர். எப்படியாவது பதினாயிரம் பவுண்டு பரிசைப் பெறவேண்டும் என்பதும் பல சிப்பாய்களின் ஆசை. அத்துடன் மற்றக் குற்றவாளிகளைப் பார்க்கிலும், லோலோஹெட்பக் ஆசாமிகளையே பிடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம்.

எல்லாச் சிப்பாய்களும் தான்பிரீனுடைய காருக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றனர். தான்பிரீனும் தோழர்களும் கலக்கமடைந்தால்,

காரி

63