பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


தில் விடும்படியாக உத்தரவிட்டார். அவர்கள் அறுநூறு அடி தூரம் காரைத் தள்ளிக்கொண்டுபோய் விட்டனர்.

அந்தச் சிப்பாய்களுக்குத் தான்பிரீன் சொன்ன வந்தனங்களுக்கு அளவே யில்லை! சிப்பாய்களும் திரும்பத் திரும்ப 'சலாம்' செய்து விட்டு எங்கோ மறைந்திருப்பதாய்க் கேள்விப்பட்டதான் பிரீன் கூட்டத்தாரைக்கண்டு பிடிக்க மற்றச்சிப்பாய்களோடு சென்றுவிட்டனர்!

சிப்பாய்கள் விடைபெற்றுச் சென்ற மறுகணத்திலேயே தான்பிரீனுடைய கார் வேகமாய்ப் பறக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்ற பின்பு தொண்டர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு வயிறு வெடிக்கும்படி சிரித்தனர். அதுவரை உள்ளத்தில் கட்டுப்பட்டிருந்த சந்தோஷம் வெள்ளப் பெருக்கெடுத்தது போலிருந்தது.

70