ப. ராமஸ்வாமி
கிலும் காரியம் பலிக்கவில்லையானால், அடுத்த ஸ்டேஷனான பிளார்னிக்கு மோட்டாரில் செல்வது என்று அவர்கள் தீர்மானித்தனர். மற்ற நால்வரும் எமிலிக்குச் சென்றனர். அவர்கள் அங்கு ரயிலில் வந்தவுடன் அதில் ஏறிக்கொண்டு, யாரும் சந்தேகிக்காதபடி ஹோகனிருந்த இடத்திற்குப் பக்கத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்றும், நாக்லாங் வந்தவுடன் அங்கு காத்திருந்த தான்பிரீன் முதலானவர்களுக்கு அந்த வண்டியை அடையாளம் காட்டவேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தான்பீரினும் நண்பர் இருவரும் நாக்லாங் ஸ்டேஷனை அடையும் பொழுது முதல் மணி அடிக்கப்பட்டது. ரயில் எமிலியை விட்டுப் புறப்பட்டுவிட்டது என்பதை அது அறிவித்தது. தொண்டர்கள் ரயில் நிற்கக்கூடிய மேடைக்குச் சென்று உலாவிக்கொண்டிருந்தனர். அவர்கள் சாதாரன மனிதர்கள் போலவே காணப்பட்டார்கள். ஆனால், அவர்களுடைய கைகள் மட்டும் சட்டைப்பைக்குள் ரிவால்வரைப் பற்றிய வண்ணமாயிருந்தன.
தூரத்தில் எஞ்சினுடைய புகை ஆகாயத்தில் தெரிந்தது. அடுத்த நிமிஷத்தில் வண்டி ஸ்டேஷனில் வந்து நின்றது. அதே சமயத்தில் கார்க் நகரிலிருந்து வேறோரு வண்டியும் வந்து அடுத்த தண்டவாளத்தில் நின்றது. அந்த வண்டியில் ஏராளமான பட்டாளத்தார்கள் இருந்தனர் என்பது தொண்டர்களுக்கு மறுநாள் தான் தெரியவந்தது. அன்று நடந்த குழப்பத்தில் எக்காரணத்தாலோ பட்டாளத்தார் கீழே இறங்கிக் கலந்து கொள்ளவில்லை. ஒரு வேளை அவர்களுக்குத் தகவல் கிடைப்பதற்கு முன்னரே கலகம் முடிந்து விட்டது போலும்.
ரயில் தண்ட வாளத்தில் நிற்குமுன்பே வண்டியிலிருந்த தோழர்கள் ஆசாமி இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். ரயில் ஒரு நிமிஷம்தான் நிற்கும். அதற்கு மேல் நிற்க வேண்டுமானால் எஞ்சின் ஒட்டியவர்களைச் சுடவேண்டியிருக்கும். அதற்கு அவசியமில்லாமல், அந்த ஒரு நிமிஷத்திற்குள் காரியத்தை முடித்து விடவேண்டுமென்று தான்பிரீன் தீர்மானித்தான்.
ஹோகன் இருந்த வண்டி மிக நீளமானது. அதில் பன்னிரண்டு தனி அறைகள் இருந்தன. அந்த அறைகளுக்கு வெளியே எல்லாவற்றிற்கும் பொதுவான பாதையிருந்தது. கால்ட்டீ ஆசாமிகள் அந்தப் பாதையிலே நின்று கொண்டிருந்தனர். ஸீன்ஹோகன் கைவிலங்கிடப்பட் டு எஞ்சின் இருந்த திசையைப்பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு இரு பக்கத்திலும் ஒரு சார்ஜென்டும், ஒரு போலிஸ்காரனும் இருந்தனர். அவனுக்கு முன்னால் வேறு இரண்டு போலிஸ்காரனும் இருந்தனர். அவனுக்கு முன்னால் வேறு இரண்டு போலிஸ்காரர்கள் அமர்ந்திருந்தனர். தான்கு காப்பாளர்களும் துப்பாக்கி, கத்தி முதலிய ஆயுதங்களையும் தயாராப் வைத்துக் கொண்டிருந்தனர். அன்றைய போராட்டத்தை ஸீன் டிரிஸியே தலைமை வகித்து நடக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவன் உத்தரவு கொடுத்து விட்டான். ரயில் வந்து நின்று ஐந்து
80