பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தாமரைப் பொய்கை

கடந்து நெடுந்துாரம் சென்று பொருள் தேடவேண்டும் என்று அவர்கள் சொல்வதுண்டு. அப்படித் தலைவ னும், உயர்ந்த சிகரங்களையுடைய பல மலைகளைக் கடந்து போயிருப்பான் என்று அவள் எண்ணியிருந் தாள். * - -

எவ்வளவு துரந்தான் இருக்கட்டுமே கோடு (கொடுமுடி) உயர் பன்மலை கடந்தாராயினும், அங்கே அவரைத் தங்கும்படி விடுமா, இவள் கண்?

இந்த கினைவோடு பழைய காட்சி ஒன்று அவள் அகக்கண்முன் எழுந்தது. -

ஏன் நீ அழுகிருய்? அவர் விரைவிலே வந்து விடுவார். அவர் உன் இன்பத்தைக் கருதித்தானே பிரிந்தார்?' என்று தோழி கூறினுள். -

தலைவி அதைக் கேட்டும் கேளாதவளப்போல அழுது கொண்டிருந்தாள்.

"நீ இப்படி அழுதால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? உன்னே இகழ்வது இருக்கட்டும். உன் தலைவரை இகழ்வார்களே! அதை நினைத்துப் பார்த் தாயா? அதற்காவது உன் அழுகையை அடக்கிக் கொள்ளக்கூடாதா ? . -

தலைவி தன் கண்ணிரைத் துடைத்துக் கொண் ட்ாள். சிறிது நேரம் சும்மா இருந்தாள், ஒரிடத்தில் உட்கார்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள் நீடு