பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தாமரைப் பொய்கை

லறம் கடத்தும் ஆற்றலேயும், எப்போதும் புன்னகை பூத்த முகத்தோடு தோன்றும் எழிலேயும், இன்னுரை யையும், நாயகன் மனம் கோணுமல் கடக்கும் சிறப் பையும், அவனேயே தெய்வமாக மதித்து ஒழுகும் பெருமையையும், பெருந்தன்மையையும் தனித்தனியே மக்கள் எடுத்துப் பாராட்டினுர்கள். பொருளிலே குறைவு இருந்தால்கூட அது புறத்தாருக்குப் புலன காதபடி மறைத்து, செய்ய வேண்டியவற்றை கன்ருகச் செய்யும் திறமை அவளிடம் இருந்தது. அப்படி இருக்க, பொருள் நிரம்பிய இல்லத்தில் அவள் கடத் தும் இல்லறம் உலகத்துக்கே உதாரணமாக அமைவது வியப்பா? இல்லற வாழ்க்கையில் தன் தலைவனுக்கு எத்தகைய கவலையும் சாராமல் எல்லாவற்றையும் தானே கவனித்துக்கொண்டு, பின் வருவதை முன் அறிந்து, அதற்கு ஏற்ற பாதுகாப்பைச் செய்து கொள்ளும் அறிவு படைத்தவள் அவள். ஏதேனும் சிறு வருத்தம் தன் கணவனுக்கு வரினும் அதைத் தன் இனிய உரையாலும் உபசாரத்தாலும் போக்கிவிடும் சதுரப்பாடு அவளிடம் இருந்தது.

அவளும் அங்கே அமர்ந்திருக்கிருள். அவள் அழகே வடிவாக அமைந்தவள். திருமகளின் அருள் நிரம்பிய அந்த இல்லத்தில் அணிவகைகளுக்குக் குறை வில்லை. அவள் உடம்பிலே பொன் இழைகள் சுடர் விடுகின்றன. அவளுடைய நெற்றியில்தான் என்ன ஒளி வாள் நுதலுடைய அந்த அரிவையைப் பார்த் தால், திருமகள்தான் இப்படி வந்திருக்கிருளோ? என்று தோன்றும். --