பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. தாமரைப் பொய்கை

அங்தக் குழந்தையைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவ்ன் செம்மாந்து வீற்றிருக்கிருண். அவன் காதலி முடித்திருந்த முல்லேயின் மணம் கம்மென்று வீசுகிறது.

காதலனும் காதலியும் அன்பு செய்து வாழும் நிலை யில் இரண்டு வகை உண்டு. மணம் செய்துகொள்ளு வதற்குமுன் களவுக் காதல் செய்வது ஒன்று, மணம் செய்துகொண்டு கணவன் மனேவியாக வாழ்வது மற். ருென்று. முன்னதாகிய களவொழுக்கத்தில் இரு வருக்கும் இன்பம் ஒன்றே நாட்டமாக இருக்கும்; பிறர் அறியாதபடி ஒன்றுபடும் அவர்கள் இன்பத்திற்கு வரையறையே இல்லே. - - மணம் ஆனபிறகு அவர்கள் இன்பம் நுகர்ந்தா லும் அதனேடு அறமும் செய்யத் தலைப்படுவார்கள். அதற்கு முன் அவர்கள் வெறுங் காதலர்கள். இப்போதோ கணவன் மனைவியர்; ஆதலின் இல் லறம் கடத்தும் கடமையை உடையவர்கள். இல்லறம் என்பது கணவனும் மனேவியும் ஒன்றுபட்டு இன்பம் புணர்வது மாத்திரம் அன்று விருந்தினரை ஓம்பி, இரப்போருக்கு ஈந்து, உறவினரைப் பாதுகாத்து வாழ வேண்டும். இந்த நிலையில் வரவர அறச்செயல்கள் மிகுதியாகும். அதற்குரிய பொருளே ஈட்டுவான் தலே வன். அறச்செயல் மிக மிக, இன்பம் குறையும். ஆல்ை அன்பு குறையாது. காதலனும் காதலியும் இடைவிடாது ஒன்றுபட்டு வாழ்ந்தாலும் அவர்க ளுடைய இன்பத்திலே பழைய ஊற்றம் இராது. இயற்கையின் நியதியில்ை உடல் தளரத் தளர இன் பத்தில் வெறுப்புக்கூட கிழலிடும். .