பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S6 தாமரைப் பொய்கை

றிருந்தபோது சில பாணர் வருகின்றனர். இசைப் பெரும் புலவர்களாகிய அவர்கள் கையில் அழகிய யாழ்கள் இருக்கின்றன. அந்த அமைதியான நேரத் தில் இசையை நுகர்வதைக் காட்டிலும் சிறந்த இன் பம் வேறு இல்லை. அவர்கள் இந்த கெடுங்தகையின் குறப்பை அறிந்து யாழை மீட்டிப் பாடத் தொடங்கு கின்றனர்.

காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றபடி இசை பாடவேண்டும். அப்போதுதான் அது சிறப்பாக இருக்கும். இப்போது இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றது. முல்லைப்பண். அதை இனிமையாகப் பாடுகின்றனர் பாணர். - - " . . .

முல்லை நிலத்தில் அதற்குரிய மாலை நேரத்தில் முல்லே மணம் பரவ, முல்லேயின் இசை மெல்லப் பரவு. கிறது. அந்த யாழின் இசையோடு பாணரின் பாட் டும் ஒன்றுகிறது. கிலாமுற்றத்தில் தன் காதலியும் புதல்வனும் உடனிருப்ப முல்லப் பண்ணிசையைக் கேட்டு விற்றிருக்கும் அந்த நெடுந்தகையின் உள்ள நிறைவுக்கு உவமை எங்கே கிட்ைக்கும்? இந்திர போகம் என்று சொல்லலாமா? அமைதி நிரம்பிய வாழ்வு இந்திரனுக்கு ஏது: -- -

தலவியை வளர்த்த செவிலித்தாய் அவ்விட்டிற்கு வந்திருந்தாள். அவளேப் பெற்ற நற்ருய் தன் தோழி யாகிய செவிலித்தாயை, அவர்கள் எப்படி வாழ்வு. நடத்துகிருர்கள் என்று பார்த் துவிட்டு வா” என்று