பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு 97.

சொல்லி அனுப்பியிருந்தாள். செவிலி வந்து இரண்டு. நாட்களாயின. அவள் வீட்டிற்குள் இருக்தாள். பாணருடைய இசை அவள் காதில் விழுந்தது. அவள் மெல்ல எட்டிப் பார்த்தாள். தன் மகளும் அவள் காதலனும் அவர்களுடைய செல்வ மகனும் ஒருங்கே இருக்கும் காட்சியைக் கண்டாள். அவள் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. கடவுளேத் துதித்து. 'இப்படியே இவர்கள் வாழ்க!” என்று வாழ்த்தினுள் . சில நாட்களுக்குப்பின் அவள் தன் ஊரை அடைக் தாள். தலைவியைப் பெற்ற தாய்க்குத் தான் கண்ட காட்சியை மிக்க மகிழ்ச்சியோடு சொன்னுள். அந்தக் காட்சியை உள்ளபடி சொன்னல் போதாதா? அவர் கள் அன்பு கலந்த இன்ப வாழ்வு வாழ்கிருர்கள் என்று தனியாக எடுத்துச் சொல்ல வேண்டுமா?

பாணர் முல்லை பாடச் சுடர்இழை வாள்நுதல் அரிவை முல்லை மலைய, இனிது இருந் தனனே நெடுந்தகை, துனிதீர் கொள்கைத்தன் புதல்வைெடு பொலிந்தே.

அ பாணர் முல்லப் பண்ணப் பாட, ஒளி வீசுகின்ற அணிகலன்களையும் ஒளியையுடைய நெற்றியையுமுடைய தலைவி முல்லை மலரைச் சூடி வீற்றிருக்க, வெறுப்பு வாராமல் தீர்க்கின்ற இயல்பையுடைய புதல்வைேடு சேர்ந்து விளங்கி, இனிமையாக இருந்தான், உயர்ந்த குணங்களையுடைய தலைவன். -

பாணர்-பாட்டுப் பாடும் இசைப் புலவர்; இவர்கள் ஒரு சாதியார். 'முல்லை பாட-முல்லைப் பண்ணில் அமைந்த