பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தாமரைப் பொய்கை

கொள்ளலாமே!” என்று தோழி சொல்லவே, அவ்விரு வரும் வேண்டிக் கொள்ளத் தொடங்கினுர்கள். துலேவி என்ன வேண்டிக் கொள்கிருள் என்று தெரிந்து கொள் வதில் தோழிக்கு மிகுதியான ஆவல் இருந்தது.

தலைவி, "கடவுளே, நம்முடைய அரசனுகிய ஆதன் அவினி வா ழவேண்டும். அவ்வேந்தனுக்கு எந்தப் பகை யும் இல்லாமல் இருக்க வேண்டும். அவன் பல்லாண்டு வாழவேண்டும்' என்று வேண்டிக் கொண்டாள்.

தோழி இதைக் கேட்டபோது அவள் உடம்பு புல் லரித்தது. என்ன இது இவள் மனசும் வாக்கும் ஒன் ருகவே இருக்கின்றனவே! தலைவர் தண்ணே மணந்து கொள்ள வேண்டுமென்ற கவல சிறிதளவும் இருப்ப தாகத் தோன்ற வில்லையே! அது மாத்திரமா தன்ன லத்தை அடியோடு இழந்த நிலையை அல்லவா இவள் பெற்றிருக்கிருள்? நாட்டுக்கு அரசன் வாழவேண்டு மென்றல்லவா பிரார்த்தனே செய்கிருள்? குடிமக்கள் யாவரும் வாழ வேண்டும், மாதவர் வாழவேண்டும், மடவார்கற்புச் சிறக்க வேண்டும் என்று பல வகையில் வாழ்த்துவதற்குச் சமானமானது இந்த வாழ்த்து. வேங் தன் வாழ்ந்தால் குடி மககள வாழவாாகள. மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இல்ல யானுல் இல்லையாகும். ஆதலின் அவன் வாழ்ந்தால் கோன்பு வாழும், கற்பு வாழும், நாடு வாழும். இதனை அறிந்த பெருமூதாட்டி போல, அரசன் வாழ்க என்று

மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனின் இன்ருல்." (மணிமேகலை, 22: 208-9.)