பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை 21

இவள் வாழ்த்துகிருள் தன் நலத்தை மறந்து வாழ்த்து கிருள். இது பெரும் கருணையல்லவா? தாயின் தன்மை இதுதானே? இவள் எனக்குத் தோழி அல்ல, தாய். அறி விலுைம் அருளிலுைம் தாய் என்று கினேக்கத் தகுந்த வள் என்று அவள் மனம் தலைவியின் வேண்டுகோளுக் குப் பல பல வகையிலே பொருள் விரித்தது.

சரி, சரி. நாம் இவளைப் போன்ற உயர்ந் த கிலக்கு வர எவ்வளவோ பிறவிகளே எடுக்க வேண்டும். நாம் இன்னும் நம் கலத்தை மறக்கும் ஆற்றல் பெறவில்லை. நாமாவது இவளுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள் வோம். விரிந்த பொய்கையிலே முகைந்த தாமரையை யுடைய தண்டுறையூரர் ஆகிய தலைவர் இவளே வரை வாராக என்று பிரார்த்தனே செய்வோம். அவர் மணம் பேச விடுவதை ஏற்றுக் கொண்டு எம் தங்தையாரும் இவ&ள அவருக்கு மணம் செய்து கொடுப்பாராக என்று தெய்வத்தினிடம் நம் வேண்டுகோளைச் சமர்ப்பிப் போம் என்று அவள் மேலும் எண்ணிள்ை.

π-1 * தலைவி, 'வாழி ஆதன்! வாழி அவினி ஆதன் அவினியாகிய அவ்வேந்தன் பகை தணிக! அவன் வாழும் யாண்டுகள் பலவாகப் பெருகுக!' என்று வேண்டிக் கொண்டாள்.

தோழியோ, 'மலர்ந்த பொய்கையில் முகைந்த தாமரையை உடைய தண்டுறையூரன் வரைக! எந்தை யும் கொடுக்க' என வேட்டாள்.