பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தாமரைப் பொய்கை

தோழியின் வேண்டுகோள் பலித்தது. தலவன் தலைவியை மணந்து கொண்டான். திருமணம் சிறப் பாக நடைபெற்றது. தலேவனும் தலேவியும் இல் வாழ்க்கை நடத்தத் தொடங்கினர்கள். தோழியும் உடன் இருந்தாள்.

ஒருநாள் தலைவன் தோழியிடம் பேசிக் கொண் டிருந்தான். பழைய காலத்துக் கதையை யெல்லாம் இருவரும் பேசினர்கள். -

தலைவன், "நான் அவளே மறைவிலே சந்தித்து அளவளாவிய அங்தக் காலங்களில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்டான்.

ஆதி )שי -

தோழி, தலைவி வேண்டிக் கொண்டதையும், தான் வேண்டிக் கொண்டதையும் அவனுக்கு எடுத்துச் சொன்னுள்.

'வாழி ஆதன்! வாழி அவினி! வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!' எனவேட் டோளே, யாயே, யாமே, 'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்டுறை ஊரன் வரைக! எந்தையும் கொடுக்க! எனவேட் டேமே.

இ ஆத்ன் வாழ்க! அவினி வாழ்க! அவ்வரசன் பகைவர்கள் தாழ்ந்து போவார்களாக! அவனுக்கு ஆண்டுகள் பல வளர்க!” என்று தாய்த் தன்மையை உடைய இவள் வேண்டிக்கொண் டாள். நானும் என்னைச் சார்ந்த சிலரும், விரிந்த பொய்கை யிலே அரும்பிய தாமரையையுடைய தண்ணிய நீர்த்துறை யையுடைய ஊர்க்குத் தலைவனுகிய இவள் காதலன் இவளே