பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை 23

மணந்து கொள்வாகை எம் தந்தையும் இவளே அவனுக்கு மணம் செய்து கொடுப்பானுக!' என்று வேண்டிக் கொண் டோம்.

ஆதன் அவினி என்பது சேர அரசன் ஒருவனுடைய பெயர், பகை-பகைவர். வேந்தன் பகைமை தணிந்தவகுைக என்றது பகைவர்கள் அடங்கிப் போகட்டும் என்றபடி யாண்டு-வாழ்நாளாகிய ஆண்டுகள். நந்துக-பெருகுக. வேட் டோள்-விரும்பிளுள்; வேண்டிக் கொண்டாள். யாய்-எங்கள் தாய். மலர்ந்த-விரிந்த, பொய்கை-மானிடர் ஆக்காமல் இயற்கையாக அமைந்த நீர்நிலை. முகைந்த-அரும்பின. ஊரன்-மருதநிலத் தலைவன். வரைக-கல்யாணம் செய்து கொள்ளட்டும். வேட்டேம் - வேண்டிக் கொண்டோம். தன்னைப் போலத் தலேவியுடன் நெருங்கிப் பழகும் தோழி யரையும் சேர்த்துப் பன்மையாகச் சொன்னுள். 9

துறை, களவினிற் பல நாள் ஒழுகி வந்து வரைந்து கொண்ட தலைமகன் தோழியொடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?' என்ருற்கு அவள் சொல்லியது.

|சொல்லாடி-பேசி. இழைத்திருந்த-செய்து கொண் டிருந்த, திறம்-செயல் வகை.)

ஐங்குறு துற்றின் பழைய உரையாசிரியர் இந்தப் பாடலின் உரையில் எழுதியுள்ளவை வருமாறு:

“நின்னை எதிர்ப்பட்ட அன்றே நீ வரைந்தாய் எனக் கொண்டு இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகிய தல்லது தலைவி பிறிதொன்றும் நினைத்திலள்; யாங்கள், "அகன்ற பொய்கைக்கு அணியாகத் தாமரையை யுடைய ஊரனுதலால், அத்தண்டுறையூரன் மனக்கு அணியாம்