பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - தாமரைப் பொய்கை

இருக்கும்; அதனுள்ளே உள்ள கேசரங்கள் பொன்னிறம் உடையன. பூ கெழுமலர்கள் நிரம்பிய, துறைவன்-நெய்தல் நிலத் தலைவன் என் ஐ என் தலைவன். தனித்தனியே சொல்வதை தினத்துச் சொல்கிருளாகையால் எம் தலைவன் என்னுமல் என் தலைவன் என்ருள். என் தலைவன் என்ற அர்த் தத்தில் முதலில் தோன்றிய என்ன என்ற சொல் பின்னுல் எங்கள் தலைவன் என்ற பொருளிலும் வழங்கலாயிற்றென்று தோன்றுகிறது. வேறு ஒருவன் இவளுக்குக் கணவனுவான் என்று சொல்ல விருப்பமில்லாதவளாய்ப் பிறிது ஒன்ருக என்று சொன்னுள். பிறிது என்றது அயலார் வரைவைக் குறித்தது, ஆங்கும்-அப்படியும். பால்-ஊழ்வின. இ

துறை- நொதுமலர் வரைவின்கண் தோழி செவி

லிக்கு அறத்தொடு கின்றது.

(நொதுமலர் -೨ುಖrf, வரைவின்கண்-மனத்துக்குரிய முயற்சிகளைச் செய்யும்போது.)

தான் சொல்லும் செய்தி மிகவும் முக்கியமானது, ஆதலால் அதைக் கவனித்துக் கேட்கவேண்டுமென்று, "வேண்டு” என்ருள். வீட்டிலுள்ளோர். இப்போது செய்யும் முயற்சி தவறு என்பதைப் புலப்படுத்த வருகிற தோழி ஒருகால் அதுகேட்டுச் செவிலி சினங் கொள்ளக் கூடுமாதலால் வாழி' என்று சொன்னுள். அன்பு அதிகமாகத் தோன்றும்படி பேசுகிருள். ஆத வின் இரண்டு முறை அன்னே என்று அழைக்கிருள். -

தங்கள் மனத்துக்கு விருப்பம் இல்லாத ஒன்றை விரிவாகச் சொல்லத் தோழிக்கு வாய் வரவில்லே. அதனுல் “பிறிது ஒன்று” என்று அதைக் குறித்தாள். இங்கே கம்பர் வாக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது.