பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியும் உண்டோ ? 43

கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்ட போது அவன் எத்தனேயோ பன்னிப் பன்னிச் சொல்லி யும் அவள் தன் பிடிவாதத்தை விடவில்லை. தசரதன், பரதன் காட்டை எடுத்துக்கொள்ளட்டும், இராமனே மாத்திரம் காட்டுக்கு அனுப்பும்படி சொல்லாதே'

என்று கெஞ்சுகிருன்.

கண்ணே வேண்டும் என்னினும்

ஈயக் கடவேன்; என் உண்ணேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்ருே ? பெண்ணே, வண்மைக் கேகயன்

மானே, பெறுவாயேல் மண்ணே கொள் நீ; மற்றதை

ஒன்றும் மறன என்ருன்.

இராமனக் காட்டுக்குப் போகச் செய்தல் என் :பதைத் தன் வாயால் சொல்வதை விரும்பாத தசரதன், மற்றதை ஒன்றும் என்று சுட்டுகிருன். அதுபோல, *இங்கே தோழி தாம் விரும்பாத நொதுமலர் வரைவைப்

பிறிதொன்று என்று சுட்டிள்ை.

இது ஐங்குறுநூற்றில் இரண்டாவது பிரிவாகிய நெய்தலில் பதினேராம் பகுதியாகிய தாய்க்குரைத்த பத்தில் பத்தாவது செய்யுள். -

நெய்தல் முழுவதையும் பாடின புலவர் அம் மூவர்ை. .