பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46.

தாமரைப் பொய்கை

அடைகிருய். அத்தகைய உணவை உனக்கு, வழங்குவதல்ை நீ மகிழ்ச்சி அடைவாய் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆதலால் உன் மகிழ்ச் சியை நினைந்து அவர்கள் மகிழ்ச்சி அடைகிரு.ர்கள்.

தலைவி: உன் உவமை எனக்கு விளங்கியது. தலைவரை

தோ

நீ உணவு என்று சொல்கிருய். நான் உணவா? அவர் உணவா? நான்தான் உணவு. அவர் உண்பவர். நல்ல உணவை நாயுண்ணுமல் தக்கோர் உண்ணுவதுபோல இறைவன் திருவருள் எம்பிரானே எனக்குக் காதலராக்கி வைத்தது என்று சொல்.

ழி: சொல்வது வேறு. நான் உன் பெற்ருேர் களைப் பற்றிச் சொல்கிறேன். உன்னே நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்தார்கள். அறிவும் அழகும் திருவும் உள்ள மைந்தனை காடிக் கொண் டிருந்தார்கள். தலைவர் மணம் பேசச் சான்ருேர் களே அனுப்பினர். உனக்குப் பரிசமாகத் தம் ஆட்சிக்குள் அடங்கிய ஒரு நாட்டையே வழங்கு வதாகச் சொல்லியனுப்பினர். அதைக் கேட்டு உன் பெற்ருேர்கள் மிகவும் களிப்படைந்தனர்.

தலைவி: காட்டையா கொடுத்தார்?

தோழி: உலகத்தையே கொடுத்திருப்பார். அவர்

உலகம் அனைத்துக்கும் அரசர் அல்லவே!

அவருடைய ஆர்வத்துக்கு எல்லையே இல்லை.