பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...A.8

தாமரைப் பொய்கை

மகளிருக்கு வழக்கம் என்பது தெரிந்த செய்தி தான். நாமும் அத்தகைய தழையாடையை அணிகிருேமே, தலைவர் பரிசமாகத் கொடுத்தாரே அந்த நாடுகூடத் தழை விலையாகத் தந்தது தானே? - -

தலைவி. அந்த காட்டு மகளிர் தழையுடையை உடுத்து

கிருர்கள் என்பது வியப்பான செய்தி அல்லவே?

தோழி: மலரும் தழையும் கலந்து கோத்து அணிவது

வழக்கம். மலர் இல்லாவிட்டாலும் தழையையே கோத்து அணிவார்களாம்.

தலைவி. ஏன் அப்படிச் செய்யவேண்டும்?

தோழி நெய்தல் நிலத்தின் கடற்கரையில் மணல்

மேட்டில் ஞாழல் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அம்மரங்கள் மலரும் பருவம் ஒன்று உண்டு. அவை மலரோடு இருந்தால் மலரையும் தழையையும் பறித்துத் தழையாடையைப் புனேவார்கள். மல ராத பருவமானுல் அம்மகளிருக்கு மலர் கிடைக் காது. அப்போது எக்கரில் வளர்ந்த ஞாழலின் தழையையே விரும்பிப் பறித்துத் தழையாடை புனேவார்களாம். ஒள்ளிய தழையை விரும்பும் மகளிர் இயல்பு நம் பெருமானுடைய இயல்பைப் போலவே இருக்கிறது.

தலைவி. உனக்கு எதையும் உவமை காட்டிப் பேசும்

பழக்கம் உண்டாகிவிட்டது.