பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழை விலை 49

தோழி; அது தவரு கருத்து விளங்கவேண்டுமானல் உவமையைச் சொல்லி எளிதில் விளங்க வைக்க லாம். சுற்றிச் சுற்றிப் பல சொல்லி விளக்குவதை விடத் தக்க உவமை ஒன்ருல் தெளிவாகக் கருத்தைப் புலப்படுத்திவிடலாம்.

தலைவி. பெரும் புலமைப் பிராட்டியாரே, தங்கள் உவமையைத் தயை செய்து முற்றும் கூறி விளக்குங்கள். (புன்னகை பூக்கிருள்.)

தோழி: (சிரித்தபடி) எக்கர் ஞாழலின் மலர் பெருத மகளிர், ஒண் தழையை விரும்பும் துறைவர் என்று

புேலவர்கள் பாடியிருக்கிருர்கள். மலர் இல்லாத மகளிர் அதன் தழையை விரும்பினர்கள்; அந்தத் துறையை உடைய தலைவரோ உலகத்தையே உனக்குத் தழை விலையாக வழங்கவேண்டுமென்ற ஆர்வமுடையவர்; அவரிடம் உலகம் இல்லாமை யால் நாட்டை வழங்கினர்.

தலைவி: உன் உவமை கன்ருக இருக்கிறது. அவ - ருடைய வரவை நம்மவர்கள் ஏற்றுக்கொண்டு

விட்டார்கள் என்பது உறுதிதானே ?

தோழி: என்ன அப்படிக் கேட்கிருய்? ஊர் முழுவதும் - அதேபேச்சாக இருக்கிறது. இப்போதே திருமணத் துக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தலைவர் உன்னே மணந்து கொள்ளப் போகும் செய்தி எங்கும் பரவிவிட்டது. எல்லோருக்கும் பெருங்களிப்பு. உன் தலேவர் தழை விலையாக காட்டைத் தந்தாரே. அதனல் வங்த மாட்சி இது.