பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - தாமரைப் பொய்கை

எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் ஒண்தழை அயரும் துறைவன் தண் தழை விலைஎன கல்கினன் நாடே.

அ கடற்கரையில் உள்ள மணல் மேட்டில் ஞாழல், மரத்தில் தமக்கு வேண்டிய மலர் இல்லாமற் போன பெண் கள் வளப்பமான அதன் தழையைத் தம் ஆடைக்காக, விரும்பிக்கொள்ளும் துறையையுடைய தலைவன் உன்னுடைய தண்ணிய தழைக்கு விலேயென்று நாட்டை வழங்கின்ை.

எக்கர்-மணல் மேடு, ஞாழல்-கடற்கரைச் சோலையில் வளரும் ஒருவகை மரம்; பலினி என்றும் சிலர் சொல்வர். அயரும்-விரும்பும், தழை விலை-தழையாடைக்கு உரிய விலே;. மணமகளுக்குரிய பரிசம். நல்கினன்-கொடுத்தான். இ

துறை சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன்

வரைவு மாட்சிமைப் படுத்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குச் சொல். லியது.

'தலைவியின் தாய் தங்தையராகிய உறவினர் தம் மகளுக்குப் பரிசமாக விரும்பிக் கேட்டவற்றைக் கொடுத்துத் தலைவன் தன் கல்யாண முயற்சியைச் சிறப்புறும்படி செய்ததைத் தெரிந்துகொண்ட தோழி, மகிழ்ச்சியைப் பெற்ற மனத்துடன் தலைவி யிடம் சொல்லியது என்பது இதன் பொருள்.

இதன் உரையில் பழைய உரையாசிரியர், "ஞாழல் மலர் இல்லாத மகளிர் அதன் தழையை விரும்பும் துறைவன் என்றது. உலகை வழங்க வேண்டும்.