பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழை விலை 51.

గ్హాః

உள்ளத்தன், அஃது இன்மையால் நாட்டை வழங் கின்ை என்பதாம் என்று எழுதியுள்ளார். இதன. உள்ளுறை உவமை என்று கூறுவர். வெளிப்படையாக இல்லாமல், உள்ளே உபமேயத்தை அடக்கி வைக் திருத்தலால் அந்தப் பெயரைப் பெற்றது.

தழையென்பது மலராலும் தழையாலும் அழ காகப் புனேங்து மகளிர் உடுக்கும் உடை வகை பழங். தமிழ் நாட்டில் சில விசேட காலங்களில், இத்தகைய, ஆடையை அலங்காரமாகப் புனேங்துகொள்வது வழக்க: மென்று தெரிகிறது, இன்றும் மலையாளத்தில் மலே யில் வாழும் சில சாதியினரும், அமெரிக்காவில் உள்ள சிவப்பு இந்தியரும், பலித் தீவிலுள்ள மகளிரும் ஒரு வகைத் தழையுடையை அணிவது உண்டு.

தலைவன் தலைவியைத் தோழியின் மூலம் சந்திக்க லாம் என்ற எண்ணத்தோடு அவளே அணுகும்போது தலைவியிடம் சேர்ப்பிக்கும்படி ஏதேனும் கையுறை, யைக் கொண்டு வருவது வழக்கம். பெரும்பாலும் அது. தழையாடையாகவே இருக்கும். ஆடை அளித்துக் காதலியைப் பெறும் வழக்கம் மலேகாட்டில் இன்றும் உண்டு, முண்டு கொடுத்து மனேவியாக்கிக் கொள் வார்கள்.

ஒரு பெண்ணே மணம் பேசும் பொருட்டுக் தக்க பெரியோர்களே விடுக்கும்போது ஏதேனும் பரிசம் போடும் வழக்கம் இக்காலத்தும் பல சாதியினரிடம் இருக்கிறது. இந்தப் பரிசத்தை. மணமகளுக்குப் பயன்படும் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி வழங்

தாமரை-8