பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தாமரைப் பொய்கை

குவது வழக்கம். மணமகளின் மஞ்சட்பூச்சுக்குப் பயன்படக் கொடுத்ததாகக் கருதி "மஞ்சட் காணி" என்று நிலத்தை வழங்குவது இன்றும் வழக்கில் இருக்கிறது. அவ்வாறே தழைவிலை என்று பரிசத்தைக் குறிப்பது பழங்கால வழக்கம். முலை விலை என்றும் பழைய இலக்கிய இலக்கணங்களில் இதை வழங்குவர் புலவர். காற்கவிராச நம்பி என்பவர் இயற்றிய அகப் பொருள் விளக்கம் என்ற நூல் உரையில் இந்த ஐங் குறுநூற்றுப் பாட்டு மேற்கோளாக வருகிறது. "காதலன் முலைவில விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல் என்ற துறைக்கு உதாரணமாக இது காட்டப் பெற்றுள்ளது. அங்கே சொன்ன முலைவிலே யும், பாட்டில் வரும் தழை விலயும், வழக்கில் உள்ள பரிசமும் ஆகிய எல்லாம் ஒன்றுதான்.

இது நெய்தற் பிரிவில் பதினேங்தாகிய ஞாழற். பத்தில் உள்ள ஏழாவது பாட்டு, இதைப் பாடியவர் அம்மூவர்ை.