பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

兖 - தாமரைப் பொய்கை

விலையாகப் பொருள் தரவேண்டுமே! அதை ஈட்டவே இங்கு வந்திருக்கிருன் அந்த முத்தை அவன் இனி மேல் புதிதாகத் தன்னுடையதாக்கிக் கொள்ளவேண் டும் என்பது இல்ல்ை. முன்பே அவனுக்கு உரியதாகி விட்டது. விலை கொடுத்து வீட்டுக்கு எடுத்துவர வேண்டியதுதான். - - -

வளையிலே (சங்கிலே) படும் (உண்டாகும்) முத்தைப் பரதவர் பகரும் (விற்கும்) கடல் கெழுகொண் கனுடைய காதல் மடமகள் இவனுக்கு எத்தனே இன்பம் தந்தாள்! இன்று அவளே துன்பத்தையும் தருகிருள். இந்தத் தனிமைத் துன்பம் நீங்கக் கூடிய தாக இல்லை, படவேண்டியதாகவே இருக்கிறது. தனிம்ை இருக்கும் வரையில் அது கெடல் அருந் துயர ம்ாகவே இருக்கும். கண் படுவதற்கு இனிதாக இருந்த படுக்கையையும் அவள் பறித்துக்கொண்டாள். படுக் கையிற் படுத்தோம், சுகமாகத் தூங்கினேம் என்பது இல்லாமல், தன்ன்ை கினைந்து, படுக்கை முள்ளாக உறுத்த இரவெல்லாம் விழித்திருக்கும்படியாக அவள் செய்துவிட்டாள். உறக்கங் கெடுத்தவள் அவள். கன்படுதற்கு இனிய பாயலே வெளவினுள்: கெடலருங் துயரத்தை கல்கினுள். -

இப்படி எண்ணி எண்ணிப் பெருமூச்சு விடுகிருன்

வன்படு முத்தம் பரதவர் பகரும் கடல்கெழு கொண்கன் காதல் மடமகள் கெடலரும் துயரம் கல்கிப் 2 - படில்இன் பாயல் வெளவி யோனே!