பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறக்கம் கெடுத்தவள் 59

e சங்கிலே தோன்றும் முத்துக்களைப் பரதவர் விற்ப தற்குக் காரணமாகிய கடலப் பொருந்திய நெய்தல் நிலத் தலைவனுடைய அன்புக்குரிய இளைய மகள், கெடுவதற்கரிய துயரத்தைத் தந்து, இதற்கு முன் படுத்து உறங்குவதற்கு இனியதாக இருந்த பாயலேப் பறித்துக் கொண்டாள். -

வளே-சங்கு. படு-உண்டாகும். பரதவர்-வலையர். பகரும்விற்கும்; கொள்முதல் இவ்வளவு, லாபம் இவ்வளவு என்று வெளிப்படையாகச் சொல்லி விற்பதால் விற்பனைக்குப் பகர்தல் என்று பெயர் வந்தது. கொண்கன்-நெய்தல் நிலத்துத் தலைமகன். காதல்-அன்பு. படல் இன் பாயல்-கண் உறங்க இனிய படுக்கை.வெளவியோள்-பறித்துக்கொண்டாள்.பாயலே வெளவியோள் என்பது உறக்கம் வராமற் செய்தவள் என்ற கருத்தை உடையது. ே

தலைமகன் தனித்து உறைய ஆற்றய்ைச் சொல் லியது. -

(வரைவு-மணம். இடை வைத்து-இடையிலே நிறுத்தி வைத்து.

பெறுவதற்கு அரிய முத்தைப் பரதவர் விற்கும் கடல் கெழு கொண்கன் என்றது, அவர்கள் தாராதார் அல்லர், யாம் அவர்களுக்கு வேண்டுவன கொடுத்துக் கொள்ளமாட்டாது வருந்துகின்ருேம் என்பதாம்’ என்பது பழைய உரை. .

நெய்தலில் 20-ஆவது பத்தாகிய வளப்பத்தில் ஐந்தாம் பாட்டு இது. இதைப் பாடிய புலவர் அம்மூவர்ை.