பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிநிற மால்வரை es

மெல்ல மலேயும் மறையும். அதன் உருவம் மறைய மறைய அவள் கண்களில் நீர்ப்படலம் படரும். பாத் தியிலே நன்முக நீரைத் தேக்கிக் கருவிள மலரை வளர்த்தால் அது கரு கருவென்று வளரும். அதன் தோற்றத்தை அவளுடைய கண்கள் பெற்றிருந்தன; தலைவனுடைய மணிகிற மால்லரை மறையுந்தோறும் மலர் போன்ற அவளுடைய நீண்ட கண்களில் நீர்த்

துளிகள் நிறையும்,

பகல் நேரத்தில் செவ்வி நேரும்போதெல்லாம் தலைவி தன் வீட்டிற்கு எதிரே சிறிது தூரத்தில் தோன் றும் மலையைப் பார்த்துக்கொண்டே நிற்பதை மற்ற வர் யாரும் கவனிக்கவில்லை; ஆனால் அவளுடைய உயிர்த் தோழி அதைக் கவனித்தாள். தலைவியின் உள்ளத்தை கன்ருக உணர்ந்தவள் அவள். மலேயைக் கண்டு ஆறுதல் பெறுவதையும், அது மறைந்தால் கண் கலங்குவதையும் அவள் கூர்ந்து நோக்கினுள். தலைவி யின் செயலுக்குரிய காரணமும் அவளுக்குத் தெரியும்.

தலைவி வரவர மெலிந்து வந்தாள். தலைவனேக் காணுமல் உள்ள காலம் மிகுதியாக இருப்பதுதான். அதற்குக் காரணம். இனி இப்படி இருந்தால் இவ ளுக்குத் தீங்கு நேரும். தலைவனுக்கும் இவளுக்கும் திருமணம் கிறைவேறும்படி ஏற்பாடு செய்யவேண்டும்' என்று தோழி தீர்மானித்தாள். தலைவியின் உடம்பு மெலிவை அறிந்த தாய்மார்கள் கவலேப்பட்டார்கள். அங்தச் சமயம் பார்த்துத் தோழி தலைவியின் செவிலித். தாய்க்கு உண்மையை உணர்த்தினுள்; அறத்தோடு.