பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翰8 தாமரைப் பொய்கை

தக்லவனுடைய காட்டை வருணிக்கும்போது, "கானவர் அகழ்ந்த குழி கிறைய வேங்கையின் மலர் உதிர்ந்து நிரம்பும் என்று தோழி சொல்கிருள். இப்படி அந்த நிலத்தில் உள்ள பொருள்களைப் பற்றிச் சொல்லும் பகுதிகள் அப்பொருள்களின் தன்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்வதோடு, தலைவன் தன்மையையும் குறிப்பாகப் புலப்படுத்துகின்றன என்று கொள்வது புலவர் மரபு. இப்படிக் குறிப்பாக அமைந்த கருத்து, வெளிப்படையாக உள்ள வருண னேக்குள்ளே உறைவது. அந்த உட்கருத்தை உள் ருறை யென்பர். வருணனையில் வரும் பொருள்கள் அவற்றிற்கு ஒப்பான வேறு ஒரு கருத்தை அறிவதற்குப் பயன்படுவதல்ை உவமை போல இருக்கின்றன. ஆதலின் இவற்றை உள்ளுறை யுவமம் என்று புலவர் வழங்குவர். சாதாரண உவமையானுல் உபமேயமும் இருக்கும். இங்கே அப்படி இல்லை. ஆலுைம் உவமை போலக் கொண்டு இவற்றிற்கு ஒப்பான வேறு பொருளை நினைக்க முடிவதால் இதை உமைப் போலி என்றும் இலக்கண நூல் கூறும். .

இந்தப் பாட்டில், கானவர் கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப் பொன்மலி புதுவித் தாஅம் என்பது உள்ளுறை உவமம். இதற்குத் தலைவனு டைய இயல்பை விளக்கும் உட்கருத்தாகிய உள்ளுறை ஒன்று உண்டு. கிழங்கு கானவருக்குப் பயன் பட்டது. ஆனல் தரையில் குழி அமைந்துவிட்டது. அங்கக் குழி குழியாகவே இராமல் மலர் அதை