பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

இரா:-ஆமாம். நீங்கள் அவற்றைப் படித்திருப்பீர்களே. எனக்கு அதைப் பற்றி விளக்கிச் சொல்ல மாட்டீர்களா?

முரு :-நல்ல கேள்வி தம்பி! உனக்குச் சொல்லாது வேறு யாருக்குச் சொல்லப் போகிறேன்! இவை பற்றியெல் லாம் ஆங்கிலத்தில் கூட எல்லாரும் படிக்க மாட்டார்கள். டாக்டர் படிப்புக்குப் போகும் பிள்ளைகள்தாம் இவை களைப் பற்றியெல்லாம் நன்றாகப் படிப்பார்கள். சிலவற்றைப் பற்றி அவர்களுக்குக் கூட நன்றாகப் புரியாது. என்றாலும் தாயின் மணி வயிற்றில் வளரும் அந்தக் குழந்தையைப் பற்றி எளிய முறையில் உனக்குச் சொல்லுகிறேன்.

இரா:-நல்லது ஐயா. இப்போதே சொல்லுகிறீர்களா? எவ்வளவு நாழி நிற்பது? வாருங்கள் அந்த மரத்தடியில் சென்று உட்காரலாம்.