பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16

லுகிறது. சென்றுக் கருவறையில் தங்குகிறது. பின் அந்தச் சிறிய அணு தான் மெள்ள மெள்ள உருவம் பெறுகிறது.

இராம:-அப்படியா? அந்த அணு முதலில் எப்படி இருக்கும்?

முரு:-அது முதல் திரவப் பொருளாகத்தான் இருக்கும். பிறகு மெள்ள மெள்ள மென்மையான கட்டியாகிப் பின் உருவத்தைப் பெறும்.

இரா:-அட! அதிசயமாக இருக்கின்றதே! அது எப்படியோ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே.

முரு :-சற்றுப் பொறுமையோடு கேள். எல்லாம் விளங்கும். ஆண் கருவாகிய அந்தத் திரவச் சிறுதுளிதான் பெண் கரு அறையைச் சேர்ந்ததும் மாறத் தொடங்குகிறது. அது எத்தனையோ வகையில் மாறுகிறது. முத