பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



17

லில் அது சிறு முட்டை வடிவமாகின்றது. கருவறையில் புகும் பொழுதே பெரும் பாலும் முட்டை வடிவத்தை அது பெற்று விடும் என்பார் சிலர். கருவறையில் அது தங்கின உடனே தனக்குப் பாது காவலைத் தேடிக் கொள்ளும். அதற்காகத் தன்னைச் சுற்றி மெல்லிய பசைச் சுவர் ஒன்றினை அமைத்துக் கொள்ளும். அதைத் தமிழில் நஞ்சு' என்று சொல்வர்கள். கருப்பை என்றும் சொல்லுவதும் உண்டு. அந்தச் சுவர் மிக மென் மையானது. இருந்தாலும் உறுதியாக இருக்கும். அதுதான் பத்து மாதமும் அந்தக் குழந்தையைக் கரு அறையில் பாதுகாத்து, பிறகு வெளியுலகத்துக்கு அழைத்துக் கொண்டு வருகிறது. அந்தக் கருப்பையினுள்தான் குழந்தையின் வாழ்வே தொடங்குகிறது. அக் கருப்பை பெண்களுக்கு இயல்பாகவே உள்ள கரு அறையில் கரு உண்டான உடனே தானாகவே அமைந்துவிடுகிறது.