பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

இரா:-அப்படியா! வியப்பே! ஆமாம். அந்தக் கருப்பையில் குழந்தை எப்படி உண்டாகிறது என்று விளக்கிக் காட்ட முடியுமா?

முரு:-ஆம்! காட்டத்தானே போகிறேன். அதற்காகத்தானே இதோ இந்தக் குறிப்புக்களைக் கூட எடுத்து வைத்திருக்கிறேன். கவனமாகக் கேள். ஆண் குறியிலிருந்து அந்தச் சிறிய கரு, கருக்குழாய் வழியாக மெள்ள மெள்ள பெண்ணின் கருவறைக்குச் செல்லும் என்று சொன்னேன் அல்லவா! பிறகு அங்கேயே தன் கருப்பையை வளர்ச்சிக்குத் துணையாக உண்டாக்கிக் கொண்டு வளரும். ஆனல் எல்லாக் கருத்துளிகளும் நேராகக் கருவறைக்குச் செல்வதில்லை; சில சமயங்களில் கருவறைக்கு வெளியிலேயும், அக் கருவை எடுத்துச் செல்லும் கருக் குழாயிலேயும் தங்கி விடும். அப்படித் தங்கும் கருவும் ஓரளவு