பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19

வளர்ந்து பிறகு அழிந்து விடும். கருவறையின் உள் செல்லும் கருவே தனது பையை அமைத்துக் கொண்டு வளரத் தொடங்கும்.

முதலில் கரு திரவமாக இருக்கும் என்று சொன்னேன் அல்லவா! ஆம். அந்தத் திரவம் மெல்ல மெல்லக் கட்டி யாகும். நாம் பார்க்கும் கோழிமுட்டையைப் போல மிகச் சிறியதாக இருக்கும். மேலே முட்டையின் ஒடு போல் கருப் பப்பை இருக்க, உள்ளே முட்டையின் கரு திரவமாக இருப்பது போல இந்தக் குழந்தைக் கரு தங்கி இருக்கும். பிறகு அந்தத் திரவம் கட்டியாகும். அதன் பிறகு மெள்ள மெள்ள உருப்பெறத் தொடங்கும்.

இரா :-அப்படியா? முதலிலேயே நம்மைப் போலவே கையும் காலும் உண்டாகி விடாதா?