பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

உனக்குத் தெரியுமே. அந்த அளவில் கணக்கிட்டால், தலை வால் உள்பட 117 அங்குல அளவுதான் இருக்கும். அங்கு லத்தில் பத்தில் ஒரு பங்குக்குச் சற்றுக் கூட; அவ்வளவுதான். இந்தச் சிறிய அளவில் தான் முதல் முதல் கருவின் உருவம் உண்டாகிறது. அப்படி முதலில் கரு உண் டாகின்ற போது எங்கோ ஒரு சில இடங்களில் ஒன்றுக்கு அதிகமான கருத்துளிகள் தங்குவதும் உண்டு. அப்பொழுது தான் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று குழந்தைகள் பிறப்பதைக் காண்கிறோம்.

இரா :-அப்படியா! வியப்பாக இருக்கிறதே! பிறகு அந்தக்கரு எப்படி வளர்கிறது? விளக்கிச் சொல்லுங்கள்.

முரு:-ஆமாம். சொல்லுகிறேன்; கேள். இந்தக் கருவில் தலையும் நீண்ட வாலும் இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா. அது அளவில் சிறிய