பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24

நாட்காட்டி வழியில் கணக்கிடுவதல்ல. இதில் 30 அல்லது 31 நாட்கள் ஒரு மாதத்திற்கு உண்டல்லவா! இதன்படி ஒன்பது மாதத்தில் குழந்தை பிறக்கும்.

இரா:-அப்படியானால் பத்து மாதம் என்பது?

முரு:-சொல்லுகிறேன். அவசரப்படாமல் கேள். பத்து மாதம் என்பது சந்திரனைக் கொண்டு கணக்கிடுவது. நம் நாட்டில் பழைய காலத்தில் அப்படித்தான் கணக்கிட்டார்கள். சந்திரன் 27 நட்சத்திரங்களிலும் தங்கி வருகிறான் அல்லவா. அப்படி ஒருத ரம் சுற்றி வருவதை மாதம் அல்லது திங்கள் என்று அழைத்தார்கள் அந்தக் கணக்குப்படி வரும் சந்திர மாதம் பத்துக்கு உரியநாள் 270 கழித்துத்தான் நன்றாக வளர்ந்த குழந்தை பிறக்கும். இதைத்தான்' பத்து மாதம் சுமந்து பெற்றாள்' என்பார்கள்.