பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25

இரா:-ஏன் அப்படிக் கணக்கிட வேண்டும்?

முரு:-ஏனா? மாதங்களே திங்கள் அல்லது சந்திரன் அடிப்படையில் தானே உண்டாகின்றன. திங்கள் என்பது மாதத்துக்கும் பெயர்; சந்திரனுக்கும் பெயர். அது இருபத்தேழு நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றி விட்டால் அதன் மாதக் கணக்கு முடிந்து விடுகிறது. ஆனால் நட்சத்திரங்களும் நகர்ந்து கொண்டே இருப்பதால் அவற்றையும் கணக்கிட்டு இன்றைய மாதத்தைப் பிரித்திருக்கிறார்கள். பழைய கணக்குப் படித்தான் 270 நாட்களைப் பத்து மாதம் என்றார்கள். உலகில் மனிதன் தன் விருப்பம் போல் நாளை மாற்றிக் கணக்குப் போட்டாலும், கரு தான் வளரும் இயற்கையை மாற்றிக் கொள்ளுமா?