பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26

இரா:-ஆமாம்! ஆமாம். நன்றாகத் தெரிகின்றது. நான் குறுக்கே இந்தக் கேள்வியைக் கேட்டேன். நீங்கள் மேலே கரு வளர்வதைப் பற்றித் தொடர்ந்து சொல்லுங்கள்.

முரு:-ஏன்? இதுவும் தெரிய வேண்டியதுதானே. சரி, மேலே சொல்லுகிறேன் கேள். அந்த வாலொடு கூடிய சிறிய கருவைப் பற்றித்தானே சொன்னேன். அது மெள்ள மெள்ள வளர்வதை இனிச் சொல்லுகிறேன். கேள். நீ கண்ட தவளைக் குஞ்சுவின் வால் மெள்ள மெள்ளக் குறைகின்றதல்லவா? கடைசியில் அந்த வாலே அடியோடு மறைந்து நான்கு கால்களும் உடம்பும் உண்டாவதை நீ பார்த்திருப்பாயே.

இரா:-ஆமாம். பார்த்திருக்கிறேன். அப்படித்தான் இந்தக் கருவும் மாறுமோ?