பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



27

முரு:-புத்திசாலி நீ. நன்றாகப் புரிந்து கொண்டாய். ஆமாம். அந்தக் கருவின் வால் மெள்ள மெள்ள மாறி விடும். பிறகு மனித உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கும். கரு உண்டான ஆறாவது நாளிலேயே அதில் மாறுபாடு உண்டாகும் என்று சொன்னேன் அல்லவா! ஆமாம். அந்தக் கரு மேன்மேலும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கும். ஆறாவது நாளுக்குப் பிறகு 71/2, 91/2, 131/2 நாட்கள் நடக்கும்போதும் அந்தக் கருவில் மாறுதல்கள் உண்டாகும்.

இரா:-என்ன? இப்படி அடிக்கடி மாறுமா? பிறகு எப்பொழுதான் அது முழு உருவம் பெறும்?

முரு:-பொறு சொல்லுகிறேன். உலகில் எந்தப் பொருளும் தோன்றிய ஆதிக் காலத்தில் அடிக்கடி மாறிக் கொண்டேதான் இருக்கும். பிறந்த