பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28

குழந்தை ஒரு சில ஆண்டுகளில் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைகிறது! ஆண்டு தோறும் அதனிடம் எவ்வளவு மாறுபாடுகளைக் காண்கிறோம். இந்த உல கத்தில்கூட இது உண்டான காலத்தில் அடிக்கடி எத்தனையோ மாறுபாடுகள் உண்டாயின என்று இன்றைக்கு ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆம். அதுபோலவே, ஆரம்பத்திலே கரு பல மாறுபாடுகளுடன் வளர்ந்து கொண்டே வரும். நான்காவது மாத எல்லையில் எல்லா உறுப்புக்களும் நிரம்பப் பெற்று, பிறகு அதிக மாறுபாடுகள் இல்லாமலே மெள்ள வளர்ச்சி அடையும்,

இரா:-சரி, பிறகு அந்தக் கரு எப்படி வளர்ச்சி அடைகிறது?

முரு:-நாளுக்கு நாள் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்த அந்தக் கரு இருபதாவது நாளில் சுமார் 2-1 மில்லி