பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29

மீட்டர் அளவுதான் இருக்கும். ஆகவே உருவத்தில் மாறுபாடுகள் தோன்றினாலும், அளவில் பெரிதும் மாறுபாடு அப்போது இல்லை. பிறகு அளவிலும் மாறுபட்டுக் கொண்டே செல்லும். முதல் வட்டமாக இருந்து, பிறகு வாலோடு கூடிச் சில மாற்றங்களைப் பெற்ற அந்தக் கரு முன்றாவது வாரத் தொடர்ச்சியில் பலப் புது மாறுதல்களைப் பெறும். அதற்குப் பிறகு உறுப்புக்கள் உண்டாகும். குறிகள் தெரியும். முதல் முதல் மூளை தான் உண்டாகும். அதுதானே உடம்புக்கு ஆதாரம்.

இரா:-அது சரி. இடையில் எனக்கு ஒரு சந்தேகம். ஆமாம். இந்தக் கரு சாதாரணமாகப் பெண்கள் வயிற்றில் இருப்பதால் அப் பெண்ணின் உணவோடு கலந்து மாறுபட்டு வெளியில் வந்து விடாதா?