பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


முரு:-நல்ல கேள்வி கேட்டாய். உன் அறிவை மெச்சுகிறேன். அதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தான். உனக்கு முதலிலேயே சொன்னேன் அல்லவா? பெண்கள் வயிற்றில் தனியாகக் கரு அறை இருக்கிறதே அதற்குள் கரு தங்கும். என்றாலும்

கருப்பை, நஞ்சு, நஞ்சுக்கொடி அவற்றினிடையில் கரு


அங்கேயும் பாதுகாப்பு இல்லாமல் இருக்காது. கரு உண்டான உடனே அதைச் சுற்றி மெல்லிய சதைச் சுவர் உண்டாகி விடுகிறது. அதற்கு 'நஞ்சு' என்ற பெயர் உண்டு என்று முன்னமே சொன்னேனே. இதோ இந்தப் படத்தைப்