பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31

பார். இதில்' நஞ்சு' என்ற அந்தக் கருப்பையின் சுவரும் அதன் தொடர்ச்சியாகிய நஞ்சுக் கொடியும் குறித் திருக்கிறதல்லவா. ஆம்; இதில் தனியாக அக்கரு வளர்வதால் பிறவற்றால் அதிகமாகச் சேதமுறுவதில்லை. வயிற்றின் சாதாரண மாறுபாடுகளோடு ஒட்டிக் கலக்காது இக்கரு அந்தக் கருப்பையில் தனிமையில் வளரும். என்றாலும் உடலுக்கே அதிர்ச்சியோ, மாறுபாடோ உண் டானல் அப்போது கருவும் பாதிக்கப் பெறும். ஆமாம். நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?

இரா:-இருபது நாள் வளர்ந்து பின் மூளை உண்டாவது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.

முரு :-ஆமாம். ஆமாம். முதலில் மூளை உண்டாகிறது என்று சொன்னேன் அல்லவா? அதற்குப் பிறகு மெள்ள