பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



34

சற்று மெல்ல வளரும். அவ்வளவுதான். இப்படியே நாற்பது வாரம் கழித்துப் பிறக்கும் குழந்தையின் எடையிலும் வித்தியாசம் இருக்கும். சில நல்ல குழந்தைகள் 12 பவுண்டு கூட இருப்பது உண்டு. சில ஐந்து பவுண்டுக்கும் குறைவாக இருக்கும். என்ன? சொல்வது புரிகிறதா?

இரா:- ஆமாம். நன்ருக விளங்குகிறது. அந்தக் கருவில் உறுப்புக்கள் தோன்றும் என்று சொன்னீர்களே. அவைகளைப் பற்றி விளக்கிச் சொல்லுகிறீர்களா? மூன்றாவது வார எல்லையில் மூளை தோன்றும் என்றீர்கள். பிறகு அதை அடுத்து என்னென்ன தோன்றும் என்று விளக்கமாகச் சொல்ல வேண்டுகிறேன்.

முரு :-இதோ சொல்லுகிறேன். கவனமாய்க் கேள். ஒவ்வொரு நாளிலும்