பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

அது வளர்ந்து கொண்டே போவதைக் கூடச் சொல்லலாம். ஆனல் அப்படி மிக நுணுக்கமாகப் பெரிய பெரிய டாக்டர் கள் கூட ஆராய மாட்டார்கள். ஆகையால் நான் இங்கே உனக்குச் சில முக்கியமானவற்றை மட்டும் சொல்லுகிறேன். சாதாரணமாக நம் போன்றவர்களுக்கு அவ்வளவு தெரிந்தாலே போதும். அதற்கு மேல் விளங்காது. டாக்டர்களுக்கே சில சமயம் விளங்காது. நமக்கு மட்டும் விளங்குமா? -

இரா:- நன்றாயிருக்கிறது. சொல்லுங்கள். நீங்கள் சொல்லுகின்ற இந்தக் குறிப்புக்களையெல்லாம் இது வரையில் யாரும் சொல்லவில்லையே. தமிழில் இப்படி யார் விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள்?

முரு :-தம்பி அப்படிச் சொல்லாதே. நம் நாட்டில் இந்தக் கரு வளர்ச்சியைப் பற்றி எல்லாம் ஆயிரம் வருடங்