பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



36

களுக்கு முன்பே பல புலவர்கள் பாடி இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியவற்றை இன்று விஞ்ஞானிகள் கண்ட ஆராய்ச்சியோடு வைத்துப் பார்த்தால் எப்படிப் பொருந்தி இருக்கிறது தெரியுமா! ஆமாம். அவைபற்றிக் கடைசியில் உனக்குச் சொல்லுகிறேன். இப்பொது என்ன சோல்லிக் கொண்டிருந்தேன்?

இரா :கருவின் உறுப்புக்கள் தோன்றி வளர்வதைப் பற்றி உங்களுக்கு நினைவா இல்லை. எனக்கு நினைவு இருக்கிறதா என்று தானே சோதிக்கிறீர்கள்.

முரு:-தம்பி அப்படி இல்லை. உன் ஆர்வம் எனக்குத் தெரியாதா ஏதோ பேச்சு வாக்கில் மறந்து விட்டேன். இதோ சொல்லுகிறேன். முதலில் மூளை உருவாகும் என்று தானே சொன்னேன். ஆம். அடுத்து ஒவ்வொரு உறுப்பாகத் தோன்றத் தொடங்கும். கரு உண்டான 27 நாட்களில் அந்த உறுப்புக்கள் தோன்ற ஆரம்