பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



37

பிக்கும். ஒவ்வொன்ருகத் தோன்றி எல்லா உறுப்புகளும் முன்றாவது மாதத்து இறுதியில் அல்லது நான்காவது மாதத்து முதலில் பூரணமாக அமைந்து விடும். பிறகு, நன் றாக உருவான குழந்தை தொடர்ந்து பத்து மாதம் வரையில் வயிற்றில் வளரும். நான் இனிப் படிப்படியாக எவ்வெவ்வாறு காலந் தோறும் அக் கரு வளர்ந்து வருகின்றது என்பதைக் காட்டுகிறேன்.

நான்காவது வாரத்தில் கருவில் சில உறுப்புக்கள் தோன்றும். இந்த உறுப்புக்கள் வளர இடம் விட்டு, முதலில் தோன்றிய வால் மெல்ல மெல்ல மறையும்.நான்காவது வார்க் கடைசியில் மூளையை ஒட்டி நரம்பு அமைப்பும் முதுகெலும்பும் தோன்றும். பிறகு தலையோடு சேர்ந்த உறுப்புக்களாகிய கண், காது இவை தோன்றும். ஏறக்குறைய இதே வேளையில் முட்டிகள் (Limbs) சிறுசிறு முளைகள் போல மெல்ல எட்டிப் பார்க்கும். கீழேயும்

3