பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



38

மேலேயும் உள்ள (Lower and upper limbs) முட்டிகள் நான்காவது வாரக் கடைசியில் தோன்றும். இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஆறாவது வாரக் கடைசி வரை கண்டு பிடிக்க முடியாது. பிறகு அவை வளர்வதில் வேறுபாடு இருக்கும். அந்த வேறுபாட்டு வளர்ச்சி அடுத்த இரண்டு வாரம் வரை நீடிக்கும். இந்த வார இறுதியில் முக்கியமான இருதயம் உருவாவதோடு, அதன் நான்கு அறைகளும் அமைந்துவிடும்.

எட்டாவது வாரத்திலேதான் தலையின் முழுத்தோற்றமும் உருவாகும். ஐந்தாவது வாரத்தை ஒட்டிச் சதை அமையத் தொடங்கும். இந்த எட்டாவது வாரத்தில் வால் அடியோடு மறைந்து விடும். கையும் காலும் மெள்ள மெள்ள எட்டிப் பார்க்கத் தொடங்கும். காதும் மூக்கும் நன்ருக நம் கண்ணுக்குத் தெரியும். அவை நான்காவது வாரக் கடைசியில் தோன்றினாலும்,